ஆன புருவம்… அழகான வில்லென்று..!

Published:

oviyam1-horz-300x225 வில்லினையொத்த புருவம்! உவமைக்கென அகப்பட்ட உயிர்ப் பொருள்! என் கவிதை வானின் கருப் பொருள்! ஓர் நாள்… காட்டைத் திருத்தி கழனி செய்து விளைத்த பயிர்போலே… புருவம் திருத்தி வந்தாய்! மென்னகை பூத்த முகத்தில் மெல்லிய புருவம்! அழகாய்த்தான் இருந்தது…! உவகையின் பொருட்டு உவமையின் பொருட்டு… உரிமையில் வினவினேன்… முறுவல் செய்தாய்… ‘இதெல்லாம் கூடவா கேட்பீங்க…?” ரசிக்கும் முன்னர் … முறைக்கவும் செய்தாய்! வில்லுக்கு விஜயனாம்! சொல்லுக்கு ராமனாம்! புராணம் பேசும்! வில்லெடுத்துச் செய்த செயலெலாம் கொலைத் தொழில்! ஒற்றை வில்லில் ஓராயிரம் கணைகள்.. மடிந்தனவும் ஆயிரமாயிரமாய்! ஆனால் பெண்ணே… பார்வைக்கு நீயே! என் கதை பேசும்! உன்னில் இரட்டை வில்… தாக்கிய இலக்கு ஒன்றே ஒன்று! ஆம் பெண்ணே… உன் புருவ வில்லில் இருந்து புறப்பட்ட பார்வைக் கணைகள்…. என் நெஞ்சைப் பதம் பார்த்து நிலத்தில் வீழ்த்தின! என்னடா மடிந்தாளா..? கேட்டவர்க்கெலாம் என் பதில்… மடிந்தவன் நானே! மரித்தவனும் நானே!

Related articles

Recent articles

spot_img