தகுதி காண் மதிப்பு என்?

இலக்கியம் கவிதைகள்

marriagematter விடியாத இரவுகள் விளங்காத தரவுகள் விலகாத துயரங்கள் விரும்பாத விசாரணைகள்! எனக்கு மட்டும் நிழல் கிரகங்களாய் நீண்டுகொண்டே உள்ளன… கண்ணிமைக்கும் பொழுதில்… இருள் சூழ விருப்பமில்லை! உன் முகத்தை எண்ணியே இமைப்பதை மறந்தேன்! உனைக் காணும் முன் என் உள்ளத்தில் வெற்றிடம்! உள்ளே புகுந்து கொண்டாய்… வெற்றிடம் விலகியது! நீயோ என்னில் அடைபடத் தயாரில்லை! எனக்கோ உன்னை வெளியேற்றத் தெரியவில்லை! தளும்பி நிற்கும் நீராய் உன் நினைவலைகள்…! வேதனையில் வெம்பிக் கசியுது கண்ணில் திரளும் நீரலைகள்! ஒருவழிப் பாதையில் இருவரின் பாதங்களும் ஒன்றாய் நடைபோடத்தான் ஓராயிரம் பிரார்த்தனைகள்! ஆனால் இன்னும்… ஒற்றையடிப் பாதையில்தான் எனது பயணம்! நாமிருவர் நடைபோட நாமின்னும் பாதை அமைக்கவில்லை! மங்கை உனைக் கண்ட நொடி மாலைசூடும் வேளை வந்ததென மயங்கித் தொலைத்தேன் நான்! இன்னும் மயக்கம் தெளியவில்லை! அன்றே… தயங்கித் தொலைத்தாய் நீ! இன்னும் தயக்கம் விலகவில்லை! ஒரு நாள்… ’இனியவளே’ என உனை ஸ்வீட்டி என்றழைத்தேன்! நீயோ இனி எவள்? என்றாகும்படி ஒப்பந்த ட்ரீட்டியை முறித்துப் போட்டாய்! உன்னை இனியவளாய் எண்ணியதென் நெஞ்சம்! அதற்குத் தகுதியானவளாய்… உன்னை நீ எண்ணவில்லையோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.