வளர்ந்து வரும் பாடலாசிரியர் கருணாகரன்

சினி நியூஸ்

karunakaran யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான வல்லவன் படத்திற்கு ஒரு பாடல் எழுதி திரைத்துறையில் அறிமுகப்படுத்தபட்டவர் பாடாலாசிரியர் கருணாகரன். கார்த்தி, இயக்குனர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் உருவான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் வெற்றி பாடலான “பேட் பாய்ஸ்” பாடல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் வார்த்தை ஜாலத்தில் நுழைந்தார். அதனை தொடர்ந்து SS தமன் இசையில் டமால் டுமில் படத்தில் உஷா உத்துப் பாடிய டமால் டுமில் பாடல் மூலமாக ஜொலித்தார். அருள்நிதி நடித்து வெளிவந்த தகராறு, கடவுள் பாதி மிருகம் பாதி, சேர்ந்து போலாமா உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். தற்போது SS தமன் இசையில் அருண்விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள வா டீல் திரைப்படத்தில் காதல் கலோக்கியல் அந்தரு அந்தரு என்ற பாடலை எழுதியுள்ளார். மேலும் திரைக்கு வரவுள்ள 30க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் கருணாகரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.