நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது கலக்கி வருகிறது ஒரு ரிங் டோன். பலரும் தங்கள் மொபைல்களில் தாமிரபரணியைப் போற்றும் ரிங்டோனை வைத்து பெருமிதப் பட்டு வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் உயிரில் கலந்த ஒரே பொதுச் சொல் ‘தாமிரபரணி’. தாமிரபரணி ஆற்றின் பெயரை உச்சரிக்காமல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களின் வாழ்நாளை துவங்குவதில்லை. அப்படி உயிரில் இனிமையாய்க் கலந்த வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் இந்த வருடம் புஷ்கரம் எனப்படும் ஆன்மிக நிகழ்வு நடைபெறுகிறது.
நதிகளைப் புனிதமாகப் போற்றும் பாரத நாட்டின் மரபில், வரும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு அக்.11ம் தேதி முதல் பன்னிரண்டு நாட்களுக்கு வரும் புஷ்கரணியை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.
தாமிரபரணியைப் போற்றி, தாமிரபரணி மாஹாத்மியம் என்னும் பழைய நூலே உள்ளது. தற்போது, தாமிரபரணியைப் போற்றி ஒரு பாடலையும் கொடுத்துள்ளார் தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்த நெல்லை மண்ணின் மைந்தர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.
தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நதிப் பாடலாக இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில், அருண் கணேஷ் இசை கோர்வையில், கவிநேசன் வெள்ளத்துரை வரிகளில், அனந்து, முகேஷ், நெல்லை ஸ்ரீராம் மற்றும் பின்னணிப் பாடகர்கள் இணைந்து பாடிய பாடல் இப்போது நெல்லை மாவட்டத்தில் ஹிட் அடித்து வருகிறது.
பலரும் 30 நொடிகளுக்கு இவற்றை கட் செய்து, தங்கள் மொபைல் போன்களில் ரிங் டோனாக வைத்து வருகின்றனர். நெல்லை மாநகர பேருந்துகளில் திடீரென ஒலிக்கும் இந்த ரிங் டோனைக் கேட்டு ஆச்சரியப் படாதவர்கள் இல்லை…!
அந்த ரிங்டோன்கள்…




