ajith3 - 2026

AK: செம ட்ரெண்டிங்கில் வைரலான புகைப்படம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith3 - 2026

நடிகர் அஜித் குமாரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதை பார்த்து விட்டு ரசிகர்களும் இது ஏகே 61 லுக்கா என கேட்டு வருகிறார்கள்.
வரும் 24ஆம் தேதி வலிமை படம் மிக பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

பிரம்மாண்டமாக, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடு செய்து வருகிறது.

ajith 3 - 2026

வலிமை ரிலீஸ் தேதி நெருங்கி வருவதாலும், ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது என்பது போன்ற அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருவதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து மீண்டும் வினோத்துடன் மற்றும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத். இதை போனிகபூர் தயாரிக்க உள்ளார், இந்த படத்தின் பிரம்மாண்ட செட் தற்போது தயாராகி வருகிறது.

ajith kumar - 2026

தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளி வந்தாலே அன்று முழுக்க ட்ரெண்டிங்கில் இருக்கும் அதேபோல் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இந்த புகைப்படத்தில் காதில் மின்னும் கம்மல், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வேற லெவல் வித்தியாசமான லுக்கில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித்.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு வந்த அஜித்தை அடையாளம் கண்டுபிடித்த அங்கிருந்த ரசிகர்கள் சிலர் அஜித்துடன் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

இந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இந்த பார்த்து விட்டு ரசிகர்கள் சிலர், இது ஏகே 61 லுக்கா…ஹேர் ஸ்டைல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். ஏன் இவ்வளவு பெரிய தாடி…கொஞ்சம் ட்ரிம் பண்ணிருக்கலாம். அஜித் மறுபடியும் காதில் கம்மல் போட ஆரம்பிச்சுட்டாரே என பல விதமாக கருத்து சொல்லி வருகின்றனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.