கட்டுக்கட்டாக பணம்?! மீண்டும் கோவையில் கண்டெய்னர் லாரி பரபரப்பு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

containerlorry vert - 2026

கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, கோவையில் கண்டெய்னர் லாரியை மடக்கிய மக்கள் அதனை சிறைப் பிடித்தனர்.

கோவை உக்கடத்தில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவிலும் நூற்றுக்கணக்கில் திரண்ட மக்கள், கண்டெய்னர் லாரியை திறந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டெய்னரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து திறந்தனர். ஆனால் அதில் டீத்துள் மட்டுமே இருந்தது தெரியவந்தது.! இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இதுபோல் ஒரு கண்டெய்னர் லாரி சிக்கியது. அதில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது .இது பின்னர் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.