29 C
Chennai
02/07/2020 11:21 AM

நாளை பள்ளிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும்! பள்ளி கல்வித் துறை!

Must Read

இபி கொடுத்த இடி: ஏழை தொழிலாளியின் குட்டி வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரூ.2.92 லட்சம்!

வீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.

விருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்? தீவிர தேடுதல் வேட்டை!

சுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!

சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.
school

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கடைகள், பேருந்துகள், டாஸ்மாக் கடைகள், ஓட்டல்கள் என அனைத்தும் திறக்கப்பட்டு வருகின்றன.

நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும் என்றும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வரும் 15ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் தமிழக கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த அலுவல்களை பார்ப்பதற்காக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வருவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad நாளை பள்ளிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும்! பள்ளி கல்வித் துறை!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
898FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!

சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.

சமையல் புதிது.. :

சினிமா...

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

பாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்!

பிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.

More Articles Like This