குற்றாலம் அருவியில் ஆண்களுக்கு அனுமதி இல்லை! ஏமாற்றமடைந்த ஐயப்ப பக்தர்கள்!

இதை முன்னிட்டு குற்றாலம் அருவியில் பகல் 10 மணி வரை ஆண்கள் எவரும் செல்வதற்கு அனுமதிப்பதில்லை

IMG 20191125 WA0021

இன்று கார்த்திகை இரண்டாவது சோமவாரம். இதை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி புனிதத் தலமாக பண்டைய காலம் முதல் திகழ்ந்து வருகிறது. திருக்குற்றால அருவியில் அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம் உண்டு. அடுத்து திருக்குற்றால நாதர் ஆலயத்தில் அகத்திய பெருமான் திகழ்கிறார்.

இங்கே கார்த்திகை சோமவாரத்தில் பெண்கள் அதிகாலை முதல் தரிசனத்துக்கு வந்து 10 மணி வரை அருவியில் நீராடி அருகிலுள்ள விநாயகர் கோவிலில் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்

குழந்தை வரம் தரும் வழிபாடு என்று பெண்களிடம் நம்பிக்கை கொண்ட இந்த வழிபாட்டில் கார்த்திகை மாதம் அரசமரம் அடியில் உள்ள விநாயகரை தொழுது நாகர்களுக்கு மஞ்சள் பூசி அபிஷேகம் செய்து வழிபட்டுச் செல்கின்றனர்

இதை முன்னிட்டு குற்றாலம் அருவியில் பகல் 10 மணி வரை ஆண்கள் எவரும் செல்வதற்கு அனுமதிப்பதில்லை

பெண்கள் மட்டுமே அருவிக்கரை முழுவதும் சென்று புனித நீராடி வழிபட முடியும். இதனால் காலை அறிவியல் குளிப்பதற்காக வந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :