வலிமையான இந்தியத் தலைமை.. வாலாட்டிய பாக்., இப்போது 400 கோயில்களை சீரமைக்க உதவி!

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

varun dev temple pakistan - 2026

இந்துகளின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு செவிமடுக்கிறது. அதற்குக் காரணம் மோடி என்ற வலிமையான இந்தியத் தலைவர்..!

பாகிஸ்தானில் உள்ள இந்து மக்களின் கோரிக்கையை ஏற்று 400க்கும் மேற்பட்ட கோயில்களை சீரமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மேலும் மேலும் மிகச் மிகச் சிறுபான்மையினர் ஆகி, அவர்களின் வழிபாட்டு இடங்கள், கோயில்கள் இஸ்லாமியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், இடிக்கப்பட்டும் சீரழிந்து விட்டன.

pakistan hindu temples - 2026

பெரும்பாலான கோயில்கள் இருந்த இடங்களில், கோயில்களை அகற்றி விட்டு, பாகிஸ்தான் அரசே இஸ்லாமிய பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றது.

எந்த ஒரு நாட்டிலும், மத சிறுபான்மையினர் இத்தகைய துன்பங்களை எதிர்கொண்டதில்லை எனும் வகையில், இஸ்லாமியர்களின் மதவெறிக்கு ஆளாகி, இந்துப் பெண்கள் ஒவ்வொருவராக வன்புணர்வு செய்யப் பட்டும், இஸ்லாத்துக்கு மாறும்படியும் காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களில் அந்நாட்டு இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்கு அரசே உதவியாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், பாக்., மத சிறுபான்மையினரான இந்துக்கள் தங்கள் பாரம்பரிய வழிபாட்டு இடங்களை புனரமைத்துக் கொடுக்கும்படியும், மீண்டும் கோயில்களை கட்டித் தரும்படியும் அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை தற்போது செவிமடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு.

Hinglaj Mata For News - 2026
பாகிஸ்தானில் உள்ள ஹிங்கலாஜ் மாதா கோயில்… இந்துக்களின் புனிதத் தலங்களாகப் போற்றப்படும் 51 சக்தி பீடங்களில் ஒன்றான ஹிங்க்லாஜ் மாதா கோவில், பாகிஸ்தானில் உள்ள ஒரே சக்தி பீடம்.

மீண்டும் இந்தியாவில் மோடியின் ஆட்சி அமையும் என்று சர்வதேச கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளதை அடுத்து, அடுத்து வரும் இந்திய அரசுடன் பகையை வளர்க்க விரும்பாத பாகிஸ்தான் அரசு, தற்போது வேறு வழியின்றி, இந்துக்களின் கோரிக்கையை ஏற்றுள்ளது.

காஷ்மீரில் புலவாமா.வில் பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல், தொடர்ந்து பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானுக்குள் சென்று பாலாகோட்டில் நடத்திய துல்லிய தாக்குதல் ஆகியவற்றால், சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப் பட்ட பாகிஸ்தான், தற்போது வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து சிறுபான்மை இந்துக்களின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் உள்ள 428 கோயில்களை புனரமைத்து மீண்டும் இந்துக்களிடம் வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

pakistan hindu temples2 - 2026
பாகிஸ்தானில் உள்ள ஹனுமான் கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு, பாகிஸ்தானின் பிறைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது…. (அரசின் ஆக்கிரமிப்பு)

இதில் முதற்கட்டமாக சியால்கோட்டில் உள்ள ஜகன்னாதர் ஆலயத்தை புனரமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.

வலிமையான இந்தியத் தலைமை இருந்தால், உலகில் வேறு நாடுகளில் இந்தியரை மதிப்பார்கள் என்பது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி அரேபியா விவகாரங்களில் வெளித் தெரிந்தது போல், இப்போது பாகிஸ்தான் விஷயத்திலும் தெரிந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.