திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பி.சி.என். கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் வயது 31. இவர் கடந்த 12ஆம் தேதி திருத்தணி-அரக்கோணம் சாலையில் உணவகத்தின் அருகே தனது பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு உணவருந்த சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. இதுகுறித்து வினோத்குமார் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த காவல்துறையினர் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த காட்சிகளில், இரண்டு பைக்கில் வரும் 8 சிறுவர்கள், தங்களது பைக் பழுதானது போல நோட்டமிடுகின்றனர். பின்னர் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவர்களுள் ஒரு சிறுவன், வினோத்குமார் பைக்கை திருடிச் செல்கிறார். இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பைக் திருட்டில் ஈடுபட்டதாக திருத்தணி அடுத்த பெரியகடம்பூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சேகர் வயது 17, ராமசந்திரன் மகன் மணிகண்டன் வயது 16, ஆகிய இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 6 சிறுவர்களை தேடி வருகின்றனர்
சிசிடிவி கேமரா வில் பதிவான காட்சியால் பைக் திருடிய சிறுவர்கள் கைது !
Popular Categories



