
சென்னையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியால் , காணொளி காட்சி மூலம், திங்கள்கிழமை காலை மதுரை காளவாசல் பாலம் திறந்து வைக்கப் பட்டது.
மதுரை மாவட்டம் மேற்கு வட்டம் வாரணாசி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், காளவாசல் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தட மேம்பாலத்தினை ஜூன் 8 இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. டி.ஜி. வினய் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் எச்.விசாகன், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர்.
- ரவிச்சந்திரன், மதுரை