Homeசற்றுமுன்பெரம்பூர் மெட்ரோ நிலையத்துக்கு வ.உ.சி., பெயரை சூட்ட வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!

பெரம்பூர் மெட்ரோ நிலையத்துக்கு வ.உ.சி., பெயரை சூட்ட வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!

voc-statue-chennai
voc-statue-chennai

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவைப் போற்றும் வகையில், சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம், பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்டிட இந்து முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில், செக்கிழுத்த செம்மல், சுதேசி கப்பல் ஓட்டி, வெள்ளைக்கார கிறிஸ்தவர்களை நடுங்க வைத்த சுதந்திரப் போராட்ட சிங்கம் வ.உ.சிதம்பரனார் 84வது நினைவு தினம் இன்று. தியாகி வ.உ.சிதம்பரனார் தனது கடைசி காலத்தில் சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்தார். அவரது 84வது நினைவு தினத்தை முன்னிட்டு, அப்பகுயில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இந்து முன்னணி சார்பில், எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து, நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட இருக்கின்ற மெட்ரோ ரயில் திட்டத்தில், வ.உ.சி. அவர்கள் பெரம்பூர் பகுதியில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம், `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ ரயில் நிலையம்’ என பெயர் சூட்டிட சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நாடு சுதந்திரம் அடைய தனது சொத்து, சுகங்களை இழந்து தனது முதுமையில் வறுமையில் வாடிய பொழுதும் கலங்காத உள்ளத்தோடு இருந்தவர் வ.உ.சி. நாடு சுயசார்புடன் முன்னேற சுதேசி சிந்தனை அவசியம் என பாரத பிரதமரால் சுட்டிக்காட்டப்படுகிறது. அத்தகைய சுதேசி உணர்வால், ஆங்கிலேய வெள்ளையனுக்கு எதிராக சுதேசி கப்பல் இரண்டை வாங்கி செலுத்தியவர் வ.உ.சி.

இந்து முன்னணி சார்பில் இன்று, தமிழகம் முழுவதும் வ.உ.சி. திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, அவரது நினைவு போற்றும் நிகழ்வு நடைபெறுகிறது… என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,158FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,492FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

Latest News : Read Now...