புஷ்கரத்துக்காக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடக் கோரி தமிழிசை மனு

சற்றுமுன் சென்னை தமிழகம் தாமிரபரணி புஷ்கரம் நெல்லை லைஃப் ஸ்டைல்

spl trains for nellai - 2026

சென்னை: தாமிரபரணி நதியில் கொண்டாடப் படும் புஷ்கரத்துக்காக வட மாநிலங்களில் இருந்து பலரும் வருவர் என்பதால், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப் பட வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

144 வருடத்திற்கு பிறகு நடக்கவிருக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவிற்காக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை மனு அளித்தார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் புனித நதியான தாமிரபரணியில் வரும் அக்.11 முதல் பன்னிரண்டு நாட்களுக்கு மகாபுஷ்கரம் விழா நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு தற்போதே புஷ்கர ஸ்நானம் தொடங்கிவிட்டது.

3 thoughts on “புஷ்கரத்துக்காக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடக் கோரி தமிழிசை மனு”

  1. This festival is taking place after 114 years and all people want to celebrate this in a traditional manner. Since there will be huge crowd it is necessary to run special trains to and fro Tirunelvelli Jn.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.