
சாமை பட்டர் முறுக்கு
தேவையானவை:
சாமை அரிசி மாவு – 1 கப்,
கடலை மாவு – கால் கப்,
பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

சாமை அரிசியை 2 மணி நேரம் உலர விட்டு தண்ணீரை வடித்து, துணியில் பரப்பி நன்கு உலரவிட்டு மெஷினில் கொடுத்து அரைத்து ஒரு கப் அளவு எடுத்துக்கொள்ளவும். தேவையானவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன் றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, முள்ளு முறுக்கு அச்சில் சேர்த்து சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.