தீபாவளி ஸ்பெஷல்: ராகி முறுக்கு!

Published:

ragi - 2026

ராகி முறுக்கு

தேவையானவை:

ராகி (கேழ்வரகு) மாவு – 3 கப்,

அரிசி மாவு – 2 கப்,

உளுந்து மாவு – ஒரு கப்,

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,

எள், சீரகம், ஓமம் – தலா ஒரு டீஸ்பூன்,

வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ragi murukku - 2026

உளுந்தை வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுத்து மாவாக அரைக்கவும். ராகி மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, எள், ஓமம், சீரகம், பெருங்காயத் தூள், வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர்விட்டு பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, முறுக்கு அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img