
ராகி பசலைக்கீரை மாசாலா
தேவையானவை:
கேழ்வரகு மாவு, பொடியாக நறுக்கிய பசலைக்கீரை – தலா ஒரு கப்,
பால் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
ப்ளாக்ஸ் சீட் (ஆளி விதை) பவுடர்
(டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) -சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து, உப்பு போட்டு கிளறி, பால் விட்டு கலக்கவும். இதை ஆவியில் வேக வைத்து… ஆறியதும் சிறு துண்டுகளாக செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் கேழ்வரகு மாவு துண்டுகளை சேர்த்து… கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு கிளறி, கடைசியில் ப்ளாக்ஸ் சீட் பவுடரை தூவி இறக்கவும்



