அமெரிக்க எச்சரிக்கை அம்பேல்..! மோடி – புடின் சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

வெள்ளிக்கிழமை இன்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் சந்தித்தினர்.  தில்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் இந்த சந்திப்பு நடந்தது. பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் அங்குவைத்துதான் மோடி சந்திப்பது வழக்கம். 

புது தில்லி: அமெரிக்க எச்சரிக்கையை புறம் தள்ளிய இந்தியா, ரஷ்யாவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டது. மோடி-புடின் சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

வெள்ளிக்கிழமை இன்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் சந்தித்தினர்.  தில்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் இந்த சந்திப்பு நடந்தது. பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் அங்குவைத்துதான் மோடி சந்திப்பது வழக்கம்.

நேற்று இந்தியா வந்த புதினை கட்டித் தழுவி வரவேற்ற மோடி, இன்று புடினைச் சந்தித்து அதிகாரபூர்வமாக ஒப்பந்தங்கள் குறித்துப் பேசினார். இந்த சந்திப்பில் மொத்தம் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது இருநாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் உடனிருந்தனர்.

விண்வெளித் துறை, அணு சக்தித் துறை, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மொத்தம் 20 ஒப்பந்தம் கையெழுத்தாகின.

மேலும், ஏவுகணை குறித்து ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதாரத் தடை விதிக்க்கப் படும் என்று இந்தியாவை அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால் அதை புறம் தள்ளிய மோடி, ரஷ்யாவுடனான நெருக்கத்தை வெளிப்படுத்த இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இதை அடுத்து, எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஏவுகணை இந்திய பாதுகாப்புத் துறைக்கு வலு சேர்க்கும். சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயில் கையெழுத்தாகின இந்த ஒப்பந்தம்,  அமெரிக்க எச்சரிக்கையை மீறி மேற்கொள்ளப் பட்டுள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.