
தமிழ் சினிமாவில் நம்பர் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களாலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. ஒருபக்கம் ஹீரோவுடன் டூயட் போடும் வேடங்களில் நடித்தாலும் மறுபக்கம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மாயா, டோரா, ஐரா வரிசையில் தற்போது ஒரு சைக்கோ திரில்லர் கதையில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க, நயனின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் மிரட்டலாக அமைந்துள்ளது. பெண்களை கடத்தி சென்று கொலை செய்யும் சைக்கோ கண் பார்வையற்ற நயனிடம் எப்படி சிக்குகிறார் என்பதே கதையாகும்.
இன்று நயன்தாராவுக்கு பிறந்தநாள் என்பதால், இன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[embedded content]
Source: Vellithirai News



