வீண் புரளிகளை நம்பவேண்டாம்; பாதுகாப்பு உறுதி செய்யப் படும்: அதிபர் சிறீசேன!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

maithripala sirisena - 2026

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப் படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் குண்டு வெடிப்பு குறித்து அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று உறுதி கூறினார்!

வீண் புரளிகளை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள மைத்ரீபால சிரீசேன, பொதுமக்கள் அமைதி காக்குமாறு வேண்டியுள்ளார்

இந்நிலையில், இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணம் விடுதலைப் புலிகள் என வதந்திகள் பரவியதால், இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை குண்டு வெடிப்பு பாதிப்பில் தவிப்போருக்கு உதவி எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. இலங்கையில் உள்ள இந்தியர்கள் +94777902082 , +94772234176 ஆகிய எண்களில் உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.