அடக் கடவுளே…! இப்போதானே அங்கிருந்து வந்தேன்… அங்கே குண்டுவெடிப்பா?!

இந்தியா உலகம் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

radhikasarathkumar - 2026

இலங்கையில் அடுத்தடுத்த தொடர் குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது உலகத்தையே உலுக்கியுள்ளது.

இது குறித்து நடிகை ராதிகா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,

அடக்கடவுளே… ஸ்ரீலங்காவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கடவுள் அனைவருக்கும் துணையாக இருக்கட்டும். நான் இப்போதுதான் கொழும்பு சின்னமோன் க்ராண்ட் ஹோட்டலில் இருந்து வந்தேன். அங்கே குண்டுவெடித்துள்ளது. என்னால் நம்ப இயலவில்லை.

நான் எப்போது இலங்கை சென்றாலும் சின்னமன் ஹோட்டலில் தான் தங்குவேன். கடந்த இரு தினங்களுக்கு முன் கூட அங்கு தான் இருந்தேன். குண்டு வெடிப்பு நடந்த தேவாலயம் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். தற்போது நடந்த குண்டு வெடிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.