கன்னடக் கவி பசவேஸ்வரர் (கோப்புப் படம்) லண்டன்: கர்நாடகாவில் பிறந்த ஜனநாயக சிந்தனையாளரும், மெய்ஞானக் கவிஞருமான பசவேஸ்வரர் (1134-1168) சிலை ஒன்று லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இவர், தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி. கர்நாடகத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞரான இவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று லண்டனின் முன்னாள் மேயர் நீரஜ் பாட்டீல் பெருமுயற்சி எடுத்தார். அவரின் முயற்சியால், லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் பசவேஸ்வரருக்கு பிரம்மாண்ட சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை வரும் ஜுன் அல்லது ஜுலை மாதம் திறக்கப்படவுள்ளது. இந்தச் சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.