சென்னை: தமிழிசை சென்ற விமானத்தில் பாஜக.,வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரத்தில், சோபியா என்ற பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்த விசாரணை அதிகாரி 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சோபியாவின் தந்தை டாக்டர் சாமி அளித்த புகாரின் பேரில் சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
விசாரணை அதிகாரி, வரும் 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது மாநில மனித உரிமை ஆணையம். அதே போல், சோபியாவின் தந்தை சாமிக்கும் 24ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.




