இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!

உலகம் சற்றுமுன்

Srilankabombblast - 2026

இலங்கையில் ஏசு உயிர்த்தெழுந்து வந்த ஈஸ்டர் பண்டிகையான ஞாயிறு நேற்று, சர்ச்சுகள், நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 290ஆக உயா்ந்துள்ளது. இதனை அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் நேற்று கிறிஸ்தவா்கள் சர்ச்சுகளில் சிறப்பு பிராா்த்தனையில் இருந்தனர். அப்போது சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடா் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 290ஆக உயா்ந்துள்ளது. இதில் 5 இந்தியா்கள் உள்பட 35 வெளிநாட்டவா்களும் உயிாிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புகளில், சுமார் 450 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 24 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.