December 6, 2025, 11:57 AM
26.8 C
Chennai

விண்ணில் பாய்ந்தது மாணவிகளின் செயற்கைக்கோள்! விண்வெளித் துறையின் புதிய சாதனை

sslv students.jpeg - 2025
sslv asathisat - 2025

தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணில் பாய்ந்தது.திட்டமிட்டபடி சென்ற எஸ்எஸ்எல்வி ராக்கெட், செயற்கைக்கோள்களை புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

மேலும், குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் முதல்முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது விண்வெளித் துறையில் புதிய மைல்கல் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அரசுப் பள்ளி மாணவிகளின் கூட்டுழைப்பு, இஸ்ரோவின் குறைந்த எடையுடைய ராக்கெட் என எஸ்எஸ்எல்வி ராக்கெட் பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளதால், இந்த வெற்றி புதிய சாதனையாகவும் கருதப்படுகிறது. 

வழக்கமாக அதிக எடையுள்ள செய்ற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். அதிலேயே குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், தற்போது குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களுக்கு பிரத்யேகமாக குறைந்த எடையுடைய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். ஆனால், எஸ்எஸ்எல்வி மூலம் 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த இயலும்.

அந்தவகையயில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில், 144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோளும், 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் என்ற செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில், ஆசாதிசாட் எனும் செயற்கைக்கோள், நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது.ஆசாதிசாட்
இந்த இரு செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு  எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.18 மணிக்கு கவுன்டவுன் தொடங்கப்பட்டது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories