2செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட்..

811024 e - 2026

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. விண்வெளித் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு, 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, சிறிய ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

அந்த வகையில், 120 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இரண்டு செயற்கைக்கோள்களுடன் காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 145 கிலோ எடைகொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும்.

இதற்காக 2 நவீனரக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு 8 கிலோ எடைகொண்ட ஆசாதிசாட் என்ற கல்விசார் செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 75 கிராமப்புறப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இஓஎஸ், ஆசாதி சாட் செயற்கைக்கோள்களுடன், எஸ்.எஸ்.எல்.வி டி-1 ராக்கெட்டை செலுத்துவதற்கான ஏழு மணி நேர கவுண்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்தது. சிறிய ரக ராக்கெட்டுகள் மூலம் செலவு குறைவதுடன், செயற்கைக்கோள் வடிவமைப்பாளர்களின் தேவையும் பூர்த்தியாவதாக இஸ்ரோ கருதுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 செயற்கைகோள்கள் இந்தியாவில் இருந்து ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories