வீட்டுபாடம் எழுதாத மாணவியை; 14 மாணவிகளை விட்டு அடிக்க வைத்த ஆசிரியா் கைது…!

இந்தியா கிரைம் நியூஸ்

jaill - 2026

உடன் படிக்கும் சக மாணவிகளால் மாணவியை 168 முறை கன்னத்தில் அறைய செய்த ஆசிரியர்

மத்தியபிரதேசத்தில், ஜாபுவா மாவட்டத்தில் அமைந்துள்ள தண்டலா பகுதியில் ஜவஹர் நவோதயா என்ற அரசு பள்ளி இயங்கி வருகிறது.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்த மாணவி, உடல்நலம் குறைவு காரணமாக 10 நாட்கள் விடுப்புக்கு பின் ஜனவரி 11ம் தேதி பள்ளிக்கு சென்று இருக்கிறாள்.

வீட்டுப் பாடம் எழுதாமல் சென்றிருந்ததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் மனோஜ் வர்மா, மாணவியை 6 நாட்களுக்கு சக மாணவிகள் 14 பேர் இருமுறை கன்னத்தில் அறைய உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி மாணவிகள் 168 முறை கன்னத்தில் அறையவே மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்ய நிலையில், போலீசாரும் மனோஜை கைது செய்து 14 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.