
அறுவை சிகிச்சை மூலம் ஆணின் வயிற்றில் இருந்து 116 ஆணிகள் நீக்கம்..!
ராஜஸ்தான் மாநிலம் புண்டி பகுதியைச் சேர்ந்த போலா சங்கர் என்ற 43 வயதான நபர் இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலி இருந்த வந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாண அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வயிற்று பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவர் வயிற்றில் 100க்கும் மேல் ஆணிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அதனைதொடா்ந்து அந்த நபர் வயிற்றுக்குள் இருந்த ஆணிகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர்.
மேலும் பாதிக்கப்பட்ட அந்த நபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் அவர் மெல்லிய கம்பிகளையும் விழுங்கி உள்ளதும் அறுவை சிகிச்சையின் மூலம் தெரிய வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த நபரின் வயிற்றில் இருந்த ஆணிகளால் அவரது வயிற்றில் சிராய்ப்பு கூட ஏற்படாதது ஆச்சர்யம் அளிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.



