
ஊத்துக்குடியில் சுற்றுரா பயணிகள் தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் மயங்கி விழுந்து காயம் அடைந்தனா்.
திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம், சண்முகம். இவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற அமைப்பை செயல்படுத்தி கொண்டு வருகிறார்கள்.
திருவள்ளூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 40 பேருடன் பூண்டியை அடுத்த கூடியம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கும் சுமார் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகின்ற குகைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். .
அப்போது குகை அருகே இருந்த தேன் கூட்டின் மீது யாரோ கல் எறிந்து கலைத்ததால் தேனீக்கள் சீறி பறந்தன . அவை படை எடுத்து சரமாரியாக சுற்றுலா வந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்டியிருக்கின்றது.
இதில் வேலாயுதம், சண்முகம், திருவள்ளூரை சேர்ந்த வக்கீல் எழில் அரசன், தீபக், செழியன், கல்யாணி, இவரது மகள் பவதாரணி, சிறுவானூரை சேர்ந்த ஹரிணி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தனர்.
மற்றவர்கள் அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டம் பிடித்ததால் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை போலீசார் மற்றும் கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் , செவிலியர்கள் கூடியம் குகைக்கு விரைந்து சென்றனர்.
தேனீக்கள் கொட்டி வேதனையால் துடித்து கொண்டிருந்த வேலாயுதம் உட்பட 10 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தேனீக்கள் கொட்டி பாதிக்கப்பட்ட 10க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



