கல்வெட்டில் பெயர்: ஒபிஎஸ் மகன் விளக்கம்

சற்றுமுன் தமிழகம்

தேனி மாவட்டம் குச்சனுரரில் உள்ள அன்ன பூரணி கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு நிதி அளித்ததை தொடர்ந்து ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரன் மற்றும் ஜெயபிரதிப் குமார் ஆகியோர் பெயர் கல்வெட்டில் இடம் பெற்றிருந்தது. இதில் ரவீந்திரன் பெயருக்கு முன்னால் எம்.பி தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து எம்பி என்று எழுத்துக்கள் மறைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரன் விளக்கம் அளித்தார். அதில், தேர்தல் முடிவுகள் வெளியே வராத நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செய்தவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.