மோதியின் பதவியேற்பு: உணர்ச்சி வசப்பட்டு கைதட்டி டிவியில் பார்த்த தாயார்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Modi Mother Heeraben watching swearingin - 2026

மோதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதை தனது வீட்டில் இருந்தபடியே அவரது தாயார் ஹீராபென் ரசித்துப் பார்த்தார்

வியாழக்கிழமை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் மோதியின் பதவியேற்பு விழாவினை தனது வீட்டில் இருந்தபடியே டிவியில் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார் மோடியின் தாயார் ஹீரா பென்.

குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் அவர் தனியாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். பாஜக பெரும்பான்மை பலம் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில் நரேந்திர மோதி தனது தாயாரைச் சந்தித்து ஆசி பெற வந்திருந்தார்

மோதியின் தாயார் பிரதமர் நரேந்திர மோதியின் இளைய சகோதரர்  பங்கஜுடன், காந்தி நகரில் உள்ள ராய்சன் வில்லேஜ், விருந்தாவன் பங்க்ளாஸில் வசித்து வருகிறார்! அப்போது சென்ற நரேந்திர மோதி தன் தாயாருடன் 20 நிமிடங்கள் உடனிருந்து தாயின் பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்

வியாழக்கிழமை இன்று நாட்டின் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற போது மோதியின் தாயார் ஹீராபென் வீட்டிலிருந்தபடியே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு நாட்டில் உள்ள தலைவர்கள் உலகத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் முக்கிய பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.