2 லட்சம் மலர்களுடன்ஏற்காடு கோடை விழா : ஆட்சியர் ரோஹிணி!

உள்ளூர் செய்திகள் கோவை சுற்றுலா சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

salem collector rohini - 2026

ஏற்காடு கோடை விழா குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசினார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி.

44வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை துவங்க உள்ளதாகவும், தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் இதற்காக சுமார் 2 லட்ச மலர்களை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளதாகவும் சேலம் ஆட்சியர் ரோஹிணி கூறியுள்ளார்.

ஏற்காடு கோடை விழாவிற்காக நாளை முதல் 3 நாட்கள் ஏற்காடு மலைப்பாதை ஒருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, ஏற்காடு மலைப்பாதையில் மது அருந்துவது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.