நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட தடை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
nirmala devi1 - 2026
மதுரை: அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல வைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரித்து வரும் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் நிர்மலாதேவி விவகாரத்தில்  விசாரணை நடத்திய சந்தானம் குழு மே 15ஆம் தேதி அறிக்கை தர உள்ளதாகத்  தெரிவித்த நிலையில், கணேசன் என்பவர் சந்தானம் குழு அறிக்கையை வெளியிடத்  தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்   நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம்  குழு அறிக்கை  வெளியிட தடை விதித்தது.
நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.