18 மணி நேரத்தில் 25.54 கிலோ மீட்டர் ரோடு! சாதனை படைத்த நெடுஞ்சாலைத்துறை!

Published:

vijayapur solapur road - 2026

விஜயாப்பூர் – சோலாப்பூர் இடையேயான என்.எச்.52 நெடுஞ்சாலையில், 18 மணி நேரத்தில், 25.54 கிலோ மீட்டர் ரோடு போட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாதனை படைத்திருக்கிறது. லிம்கா சாதனை புத்தகத்திலும் இது இடம் பெற உள்ளதாம்.

vijayapur solapur - 2026

விஜயாப்பூர் – சோலாப்பூர் என்.எச்.52 நெடுஞ்சாலையில், 110 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச் சாலை போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டம் அக்டோபர் மாதம் நிறைவடையும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த நான்கு வழிச்சாலையில் ஒரு வழிப்பாதையை, 18 மணி நேரத்தில் 25.54 கிலோ மீட்டர் ரோடு போட்டு நெடுஞ்சாலை ஆணையம் புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறது. இதனை படங்களுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Nithin gatgari - 2026

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சமீபத்தில் 4 வழித்தட சோலாப்பூர் – விஜாப்பூர் நெடுஞ்சாலையில், ஒருவழிப்பாதையை, 18 மணி நேரத்தில் 25.54 கி.மீ, அமைத்து சாதனை படைத்திருக்கிறது. இது, ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

road - 2026

மேலும், ஊழியர்களையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட மேலாளர், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர், நிறுவனத்தின் அனைத்து பிரதிநிதிகள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img