வேலை கிடைக்க இருசக்கர வாகனம் திருடிய இளைஞர் கைது….!

உள்ளூர் செய்திகள் சென்னை

sukkudi - 2026

இருசக்கர வாகனம் இருந்தான்தான் வேலை தருவேன் எனக்கூறியதால் அதற்காக இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனா்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கன்ன செட்டித் தெருவைத் சேர்ந்தவர் சரண்யா,

இவர் கடந்த 24ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சரண்யா சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

மேலும் வாகனம் திருடு போன இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனா்.

kithau 1 - 2026

அதில் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவன் இருசக்கர வாகனத்தை திருடியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் யோகேஸ்வரனை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து யோகஸ்வரனிடமிருந்து சரண்யாவின் புத்தம் புதிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட யோகேஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பல நாட்களாக வேலையின்றி தவித்து வந்ததாகவும், இருசக்கர வாகனம் வைத்திருந்தால்தான் வேலை கிடைக்கும் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கூறியதால் இருசக்கர வாகனத்தை திருடினேன் எனவும் யோகேஸ்வரன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.