உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸிடம் பாகிஸ்தான் படுதோல்வி!

உலகம் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

westindies pakistan - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது.

இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதை அடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய பாகிஸ்தான் வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். இதனால் அடுத்தடுத்து பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்து வந்தது.

பாகிஸ்தானின் முன்னணி வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அந்த அணி 21.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 105 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பகார் ஜமான், பாபர் ஆசம் இருவரும் தலா 22 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து, 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் கெயில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹோப் 11 ரன்களிலும், பிராவோர ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் இணைந்த பூரன்-ஹெட்மயர் இணை அடித்த் ஆட, வெஸ்ட் இண்டீஸ் அணி, 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 108 ரன் எடுத்தது! இதை அடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஓஷேன் தாமஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.