
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதுார் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். கூலித் தொழிலாளி.
இவருக்கு பொய்கை அணை பகுதியில் முந்திரி தோட்டம் உள்ளது.
இந்நிலையில் நேற்று இவர் முந்திரி பழம் பறிப்பதற்காக தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று அவரை கடுமையாக தாக்கியது.
இதில் அவருக்கு கை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
கரடியிடம் இருந்து தப்பிக்க போராடிய நிலையில் கூச்சல் போட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அக்கம்பக்க தோப்புகளில் வேலை செய்து வந்த தொழிலாளா்கள் பெரும் போராட்டத்திற்கு பின்பு கரடியை விரட்டி தேவசகாயத்தை காப்பாற்றினா்.
இதனை தொடரந்து காயம் அடைந்த தேவசகாயத்தை 108 ஆம்பலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகி்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



