ஐஆர்சிடிசி வெப்சைட்ல அசிங்க அசிங்கமா விளம்பரம் வருதாம்..! புகார் செய்தவருக்கு அளித்த பதிலப் பாருங்க…!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

irctcads - 2026டிவிட்டர் பக்கத்தில் ஆனந்த் என்பவர் ஒரு பதிவைச் செய்திருந்தார். அதில், ஐஆர்சிடிசி வெப்சைட்ல போனா…. அசிங்க அசிங்கமா விளம்பரம் வருகிறது. இப்படி கண்ட கண்ட விளம்பரத்தை போட்டுதான் தளத்தை நடத்தணுமா? என்று புகார் போட்டார். அவருக்கு ஐஆர்சிடிசி அளித்த பதிலைப் பார்த்ததும்…ச்ச்சீ என்று ஆகிவிட்டது பலருக்கு!

அனந்த் குமார் என்பவர், ஐஆர்சிடிசி வழியே டிக்கெட் பதிவு செய்யும் போது, டிக்கெட்டுகளில் சகட்டு மேனிக்கு கண்ட கண்ட விளம்பரங்கள் வருகின்றன. அதனால் எரிச்சலாகவும் சங்கோஜமாகவும் இருக்கிறது. இதை கொஞ்சம் கவனியுங்கள் என்று டிவிட்டர் பதிவில் பதிவு செய்தார். மேலும், ரயில்வே அமைச்சகம், பியூஷ் கோயல் ஆகியோருக்கும் டேக் செய்தார்.

இதை ஒரு புகாராக ஏற்று ரயில்வே சேவா ஐஆர்சிடிசி.,க்கு விளக்கம் கேட்க, அதற்கு அது அளித்த பதில்தான், ஏன் இப்படி ஒரு புகாரைப் பதிவு செய்தோம் என்று கேட்கும்படியாக ஆனந்த் குமாரை யோசிக்க வைத்துள்ளது.

ஐஆர்சிடிசி அளித்த பதிலில், கூகுள் விளம்பரங்கள்தான் இதில் வருகின்றன. கூகுள் விளம்பரன்கள் நீங்கள் எந்த மாதிரியான தளங்களைப் பார்க்கிறீர்கள், எந்த மாதிரியான கீ வேர்ட் பயன்படுத்தி இணையத்தில் மேய்கிறீர்கள் என்பது குறித்து குக்கீஸ் மூலம் உணர்ந்து கொண்டு அது குறித்த விளம்பரங்களைத்தான் காட்டும். எனவே உங்கள் சிஸ்டத்தில் உள்ள குக்கீஸை க்ளியர் செய்துவிட்டு பாருங்கள் என்ற ரீதியில் பதில் கொடுத்திருக்கிறது.irctc1 - 2026

இதை அடுத்து, இந்த விவகாரம் டிவிட்டரில் சூடு பிடித்தது. அரசு இணையத்துக்கு ஏன் கூகுள் விளம்பரம் என்று ஒருவரும், கூகுள் விளம்பரங்களிலேயே குறிப்பிட்ட விளம்பரங்களை தடை செய்யும் வசதி உண்டே அதை செய்யக்கூடாதா என்றும் சிலர் பதில் போட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.