தமிழகத்தில் சாலை விபத்து, மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: தமிழக முதல்வர் அறிவிப்பு.

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

 

edapadi cm tn - 2026தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த சாலை விபத்து, மற்றம் நீரில் மூழ்கி உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் கடப்பேரி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், கருவலூர் கோயில் திருவிழாவின்போது, ஏற்பட்ட விபத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், கெம்பட்டி காலனியை சேர்ந்த வேணுகோபால் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பெரப்பஞ்சோலை கிராமத்தை சேர்ந்த சந்திரன் கிணறு தூர் வாரும் போது, மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு மேற்கு கிராமத்தை சேர்ந்த காசியம்மாள் தனது வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பகுதி மற்றும் கிராமம் முக்கொம்பு காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த, திருச்சி மாவட்டம், தாயனூர், ராம்ஜி நகரை சேர்ந்த கீர்த்திகா மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரதீபக் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

துறையூர், தென்புறநாடு மஜரா புத்தூர், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த பிரியதர்ஷினி, சிந்துஜா ஆகிய இருவரும் உணவு இடைவேளையின்போது, அருகில் உள்ள குட்டையில் கை கழுவச் சென் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னகாயல் கிராமத்தை சேர்ந்த சேசுராஜ் கோயில் திருவிழாவிற்கு சென்ற இடத்தில், எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

சாலை விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக நடந்த பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.