இசைய கேக்க வந்தீங்களா? தண்ணி பாட்டில் கேட்க வந்தீங்களா?

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்

201901291203252962 Governor Banwarilal Purohit Inagurates Ilayaraja 75 on SECVPF - 2026

இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அருகே பூந்தமல்லியில் நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது

மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி 8 மணிக்குத்தான் தொடங்கப்பட்டது! இந்த நிகழ்ச்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் அங்கு செய்யப்படவில்லை.

டிக்கெட் வரிசை எண்ணும் சரியாக பராமரிக்கப்படவில்லை. எனவே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பலருக்கு இருக்கை இல்லை. இது போக… குடிக்க தண்ணீர் கேட்ட ரசிகர் ஒருவரிடம் என் இசையை கேட்க வந்த உங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா எனக் கேட்டு கடுப்பு ஏற்றினார் இசை ஞானி.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தின் செலவில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும் இதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று உறுதி கூறினார்.

1 thought on “இசைய கேக்க வந்தீங்களா? தண்ணி பாட்டில் கேட்க வந்தீங்களா?”

  1. என்னதான் இசை ஞானி ஆனாலும் தலை கர்வம் குறையக்காணோம். பணியுமாம் என்றும் பெருமை. சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்று வள்ளுவர் அன்றே சொல்லி வைத்துவிட்டார். வித்யை எனப்படும் அறிவு அவரிடம் நிறையவே உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் விநயம் எனப்படும் பணிவும் வேண்டும். இசையை கேட்டால் தாக்கம் அடங்காது; பசி தீராது. குடிக்க தண்ணீர் கேட்டால் ரசிகர்களை கோபித்துக்கொள்வானேன்? ஏன் இளையராஜா அவர்களே நீர் அருந்தாமலும் உணவு உண்ணாமலும் இருந்துகொண்டு தன்னுடைய பாட்டை மட்டுமே கேட்டு உயிர் வாழ்வாராமா? அல்லது இந்த 75 வயது வரை அப்படிதான் இருந்தாராமா? வயது ஏறுகிறது. நாவடக்கம் இல்லை. மமதையா புகழ் போதையா என்று புரியவில்லை. வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. இசை ரசிகர்கள் இல்லையென்றால் அவர் பாடல்கள் என்ன ஆகும்? அவர் கொஞ்சம் அடக்கி ‘வாசிக்க” வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.