நேற்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் Hastag #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்று இன்று டிரெண்டிங் ஆகியுள்ளது.
தற்பொழுது இந்த #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் Hastag ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்குக் காரணம், சமூக ஊடகங்களின் கோபம், வெகுஜன ஊடகங்களின் மீது திரும்பியதுதான்!
பொது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான கருத்து மோதலின் ஒரு பகுதியாகவே இன்றைய டிவிட்டர் ட்ரெண்டிங் உள்ளது கண்கூடு!
நேற்று நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. என்னதான் மழை லேசாகப் பெய்தாலும், அதனால் நிலத்தடி நீர் பெருகியோ, நீர் நிலைகள் பெருகியோ தமிழகத்துக்கு தண்ணீர் பஞ்சம் தீர வழி ஏற்படவில்லை.
ஆனால் ஊடகங்கள் வெறுமனே குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனவே தவிர, உருப்படியான எந்த கருத்தையும் தீர்வையும் முன்வைத்ததில்லை என்று குறைப் பட்டுக் கொள்கின்றனர் சமூக ஊடக வாசிகள். அதன் எதிரொலிப்பாகத்தான் இந்த #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் டிவிட்டர் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக்கப் பட்டுள்ளது.
Posts by Dhinasari Reporter:
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!
- சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி; செங்கோட்டை வழியாக இரண்டு ரயில்கள்!
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!


