கடுங்கோபத்தின் விளைவு… இன்றைய டிவிட்டர் ட்ரெண்டிங்… #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் !

Published:

twitter trending - 2026

நேற்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் Hastag #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்று இன்று டிரெண்டிங் ஆகியுள்ளது.

தற்பொழுது இந்த #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் Hastag ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்குக் காரணம், சமூக ஊடகங்களின் கோபம், வெகுஜன ஊடகங்களின் மீது திரும்பியதுதான்!

பொது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான கருத்து மோதலின் ஒரு பகுதியாகவே இன்றைய டிவிட்டர் ட்ரெண்டிங் உள்ளது கண்கூடு!

நேற்று நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. என்னதான் மழை லேசாகப் பெய்தாலும், அதனால் நிலத்தடி நீர் பெருகியோ, நீர் நிலைகள் பெருகியோ தமிழகத்துக்கு தண்ணீர் பஞ்சம் தீர வழி ஏற்படவில்லை.

ஆனால் ஊடகங்கள் வெறுமனே குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனவே தவிர, உருப்படியான எந்த கருத்தையும் தீர்வையும் முன்வைத்ததில்லை என்று குறைப் பட்டுக் கொள்கின்றனர் சமூக ஊடக வாசிகள். அதன் எதிரொலிப்பாகத்தான் இந்த #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் டிவிட்டர் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Related articles

Recent articles

spot_img