இன்னும் ஒரு வார காலத்துக்குள் சென்னைக்கு குடிநீர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

20THCHENNAIWATER - 2026

சென்னைக்கு இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் குடிநீர் கொண்டுவரப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோலர்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என்றும், தமிழகத்திற்கு 2,146 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது, இருப்பினும் தற்போதைய நிலையில் 1,900 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 49,144 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்குக் குடி நீர்  கொண்டு செல்லப் படுவதை தாம் தடுக்கப் போவதாகவும், பெரும் போராட்டமே வெடிக்கும் என்றும் திமுக., பொருளாளர் துரை முருகன் கூறியதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.