சென்னையில் இன்று மாலை மழை பெய்யக் கூடும்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

chennai rainfall map - 2026

சென்னையில் இன்று மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை இன்று  நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப் பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாவதால், இன்று இரவு அல்லது அதிகாலை வடக்கு கடலோர தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், சிதம்பரம் மற்றும் நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.