இலங்கைத் தமிழர்களுக்கு… இந்திய அரசு உதவியில் கட்டப்பட்ட மாதிரி கிராமம் திறப்பு!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

model village in srilanka2 - 2026

கொழும்பு: இலங்கையில் வீடு இழந்த தமிழர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்காக, இந்திய அரசு உதவியில் கட்டப்பட்டுள்ள வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமம் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது.

வீடு கட்டுதல் மற்றும் கலாசார அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியா 100 மாதிரி கிராமங்களைக் கட்டியுள்ளது. இலங்கையில் பரவலாக மொத்தம் 2400 வீடுகள் கொண்ட தொகுப்பாக இந்த மாதிரி கிராமங்களைக் கட்டியுள்ளது இந்தியா. 17.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் (ரூ.120 கோடி மதிப்பில்) இந்த வீடுகள் கட்டப் பட்டுள்ளன.

இது சார்ந்த துறையைச் சேர்ந்த அமைச்சர் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்திய தூதர் சில்பக் அம்புலே ஆகியோர் இணைந்து கம்பா பகுதியில் ரனிதுகாமாவில் அமைக்கப் பட்டுள்ள முதல் மாதிரி கிராமத்தை திறந்து வைத்தனர். முழுவதுமாக கட்டி முடிக்கப் பட்ட வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டன.

model village in srilanka - 2026இந்திய வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் 60 ஆயிரம் வீடுகள் திட்டத்துடன் கூடுதலாக இந்த 2400 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் எஸ்டேட் பணியாளர்கள் பயன்பெற இந்தத் திட்டம் இந்திய அரசால் வழங்கப் பட்டுள்ளது.

இலங்கையின் கட்டமைப்பிலும் வளர்ச்சிப் பணிகளிலும் இந்தியாவின் 70 மக்கள் நலத் திட்டங்கள் செயல் படுத்தப் படுகின்றன. சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி, வீடுகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் என பல திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் 20 திட்டங்கள் தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.