எப்பொழுதும் காதில் ஹெட்போன் மாட்டித்திரிந்தால் மனநிலைப் பாதிக்குமாம்.

அடடே... அப்படியா? ஆலோசனைகள்

இன்று  பலருக்கும் வெகுவாக இருக்கும் பழக்கங்களில் ஒன்று ஹெட்போன் பயன்படுத்துவது. உடற்பயிற்சி செய்யும்போது,பயணம் செய்யும்போது வாகனங்கள் ஓட்டும்போது இப்படி பல்வேறு நேரங்களில் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

தொலைபேசியின் கதிர் வீச்சில் இருந்து தப்பிக்க தொலைபேசி பேசும்போது ஹெட்செட் பயன்படுத்துகிறோம்.

இப்படி அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துவது சரியா? இதனால் என்ன என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

headphone 1 - 20261.அதிகநேரம் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்ட அதிக வாய்ப்புள்ளதாம்.

அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ‘சென்ஸரி நியூரல் லாஸ்’ எனப்படும் பாதிப்பு ஏற்பட்டு இதனால் காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்குமாம்.

2.தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற வியாதிகள் வர அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதும் ஒரு காரணமாம்.accident 1 - 20263.வண்டி ஓட்டும்போது ஹெட்போன் பயன்படுத்துவதால் அதிகமான அளவில் விபத்துகள் நடப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

4.அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் காதில் இருந்து வெளியேறும் அழுக்குகள் சரியாக வெளியேறாமல் காதிலையே தங்கி, சீல், காது அறிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும்.

headphone1 e1562585042284 - 2026

5.அதிக ஹெட்போன் பயன்பாட்டினால் இளம் வயதிலேயே கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு காது நன்றாக கேட்பதற்கு  மெஷின்களை இளம் வயதிலேயே பயன்படுத்த நேரிடும்.

6.அதிகம் ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையுமாம்.  ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்’ என்ற மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.