குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): மகரம்

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 28 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : mannargudirs1960@hotmail.com


10 makaram

மகரம்

உத்திராடம் 2,3,4 பாதங்கள்
திருவோணம் 4 பாதம்
அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய


உங்கள் ராசிக்கு  2 இல்  குருபகவானின் சஞ்சாரம் மிக சிறப்பாக உள்ளது மேலும் அவர் 6,8,10ம் இடங்களை பார்ப்பது வலிமை உண்டாக்குவதாக இருக்கிறது இரண்டாம் இடம் குடும்பம் தனபிராப்தி வாக்கு மனம் ஆகிய ஸ்தானங்கள் ஆகும் அங்கு குரு பகவான் வீற்றிருப்பது உங்களது குடும்ப முன்னேற்றம் செல்வ வளத்தை பெருக்கும் உங்களது மனம் தூய்மையாக இருக்கும்

கடந்தகால நிகழ்வுகள் உங்களை ஒரு இடத்தில் கட்டிப் போட்டது போல் வைத்திருந்திருக்கும் அது இப்போது நீங்கி நீங்கள் உங்கள் முயற்சிகளை செயலாற்றுவீர்கள் அதற்கு வலிமை சேர்ப்பது போல் மற்ற கிரக சஞ்சாரங்கள் இருக்கிறது மேலும் உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும் நேரம் இது பொதுவாக உங்கள் ராசிக்கு அதிபதியான சனி பகவான் ராசியில் ஆட்சி செய்வது அவர் மூன்றாம் பார்வையாக மூன்றாம் இடத்தை பார்ப்பதும் அதேபோல் ராசிக்கு 7-ஆம் இடத்தை பார்ப்பது பத்தாம் பார்வையாக துலாம் ராசி பார்ப்பது விசேஷமான ஒன்று

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

உங்கள் பொருளாதாரம் மனோதிடம் வாழ்க்கை துணைவர் முன்னேற்றம் தொழில் விருத்தி என்று எல்லாமே நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் பிடித்த வேலை அந்நிய தேச வாசம் என்று இருக்கும் மேலும் பத்தாம் இடத்திற்கு கேது மார்ச் 2022-ல் நகர்வது இரட்டிப்பு வருவாயை தரும், சொந்தத் தொழிலில் வருமானம் இரட்டிப்பாகும் இதுவரை இருந்துவந்த தடைகள் விலகி வியாபாரம் செழிக்கும் தொழில் விரிவாக்கம் ஏற்படும் அதன்மூலம் பேர் புகழ் கிட்டும்

எதிர்பார்த்த அரசு உதவிகள் வங்கி கடன்கள் கிடைக்கும் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் தேவைகள் பூர்த்தியாகும் பெயர்ச்சி இது நன்மைகள் அதிகம் நடக்கும் கஷ்டங்கள் என்று பார்க்கும்போது நண்பர்களால் உறவுகளால் அவர்கள் செய்யும் தவறுகள் அல்லது வேறு செயல்கள் உங்களை சிரமத்துக்கு உள்ளாகும் இருந்தாலும் உங்கள் ராசி அதிபதி மிக வலுவாக இருப்பதால் அது உடனடியாக விலகி விடும் உங்களுக்கு இந்தப் பெயர்ச்சி அடுத்த 144 நாட்கள் மகிழ்ச்சி முன்னேற்றத்தையும் செல்வத்தையும் கொடுப்பதாக அமைகிறது

 குடும்பம் : கணவன் மனைவி இடையே கருத்துப்பரிமாற்றம் நன்றாக இருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும் மேலும் 5-க்குடையவர் குருவுடைய அனுகூலம் பெறுவதால் புத்திர பாக்கியம் உண்டாகும் இல்லத்தில் எதிர்பார்த்த  திருமணம் நடக்கும்  சிலருக்கு வீடு நிலம் ஆடை ஆபரணம் போன்றவைகள் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முயற்சித்தால் அது பலிதமாகும் குழந்தைகளால் நன்மை உண்டாகும் பெற்றோர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் அக்கம்பக்கத்தாரோடு இணக்கமான போக்கு இருக்கும் உடன் பிறந்தோர் அல்லது வாழ்க்கை துணைவரின் உடன்பிறந்தோர் முலம் நன்மை உண்டாகும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 27 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

ஆரோக்கியம் : பொதுவாக குரு மற்றும் சனி இருவரும் நல்ல நிலையில் இருப்பதாலும் 6-க்குடையவர் 8-க்குடையவர் இவர்கள் குரு சம்பந்தம் அடைவதாலும் உடல்ரீதியான படுத்தல்கள் இருக்காது ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும் பெரும்பாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் அதேபோல் வாழ்க்கை துணைவர் ஆரோக்கியமும் மேம்படும் முன்பிருந்த வைத்திய செலவுகள் நீங்கும் அல்லது குறையும் பெற்றோர் வழியிலும் வைத்திய செலவுகள் குறைய ஆரம்பிக்கும் பிள்ளைகள் மூலம் வைத்திய செலவுகள் இருக்காது குடும்பத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :  திருச்சி அன்பிலில் எழுந்தருளியிருக்கும் அழகிய வல்லித் தாயார் உடனுறை வடிவழகிய நம்பி பெருமாளை (அன்பில் சுந்தரராஜ பெருமாளை)  சேவிக்க வேண்டும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் முடிந்தவரையில் அன்னதானம் வஸ்திர தானம் கல்வி தானம் இவற்றைச் செய்வதால் நற்பலன்கள் கூடும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories