அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் சிறுவன் பலியா?

இந்தியா தமிழகம்

dead body - 2026திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பணிக்கு இடையூறாக இருந்த மின் ஒயர்களை பிடிங்கி பணியாளர்கள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் போட்டுள்ளனர்.

பள்ளத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை  8 வயது சிறுவன் ரகுநாதன் மிதித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்கம்பிகளை அகற்றாத அதிகாரிகளின் அலட்சிம் மற்றும் மெத்தனப் போக்கால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.