
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் மேற்கொண்டு வரும் அத்துமீறலுக்கு பாஜக மாநில செயலர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்…..
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலைய அபகரிப்பு துறையின் அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறேன் !
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் நடராஜர் கோவிலையும், அதன் சொத்துக்களையும் அபகரிக்க தமிழக அரசும், அறநிலைய அபகரிப்பு துறையும் முயற்சி செய்கிறது . அத்துமீறி உள்ளே நுழைந்து அராஜகம் செய்கிறது.
இத்தனை காலமாக நடராஜர் கோவிலும் அதன் சொத்துக்களும் பாதுகாப்பாக இருக்கிறது என்று சொன்னால் அது தீட்சதர்கள் வசம் இருப்பதால்தான். ஒருவேளை அந்த திருக்கோவில் அறநிலைய அபகரிப்பு துறை வசம் வந்திருக்குமேயானால், அதன் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, கோவில் சிலைகள் வரை திருடப்பட்டிருக்கும். மயிலாப்பூரில் ‘மயில் சிலை’ வரை, இந்த அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் தானே களவு போனது ?! தமிழகத்தில் பல கோவில்கள் அறநிலையத் துறையின் அபகரிப்பின் கீழ் வந்த பிறகே சிதைந்து போனது. இது வரலாறு.
நடராஜர் கோவிலும் நடராஜர் கோவில் சொத்துக்களும் அதன் நகைகளும் பாதுகாப்பாக இருப்பது, அறநிலையத் அபகரிப்பு துறையின் கண்களுக்கும், திமுகவின் கண்களுக்கும் உறுத்தலாக இருக்கிறது .எனவே அந்த கோவிலை அபகரித்துக் கொள்ள கடந்து துடிக்கிறது.
உச்ச நீதிமன்ற ஆணையையும் மதிக்காமல் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது. தமிழக அரசும், அறநிலைய அபகரிப்பு துறையின் அதிகாரிகளும் தங்களுடைய அபகரிப்பு எண்ணத்தை கைவிட்டு உடனடியாக நடராஜர் கோவிலில் நடத்துகிற அத்துமீறலை கைவிட வேண்டும்… என்று தெரிவித்துள்ளார்.