
கோவை, பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா ஒரு சர்ச்சையை ஏற்படுத்திவிட்டு, ஓட்டுநர் பணியிலிருந்து விலகிய நிலையில் சகமல் அவரைப் பாராட்டி, அவருக்கு கார் வழங்கியுள்ளார். இது, ஒரு விளம்பரத்துக்காக கமல் இவ்வாறு செய்வதாக ஒரு தரப்பும், கமல் சத்தமின்றி உதவிகளைச் செய்து வருவதாக மற்றொரு தரப்பும் சமூக வலைதளத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கோவை பகுதியின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என ஷர்மிளா, சில மாதங்களுக்கு முன்பு தனியார் பேருந்து கம்பெனியில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார். இளம் வயதில் பேருந்தை லாகவமாக இயக்கும் அவரது வீடியோக்கள் ரீல்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பின் பல்வேறு இயக்கத்தினர், சங்கத்தினர், கட்சியினர் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து பரிசுகளையும் கொடுத்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்கள். குறிப்பாக, ஷர்மிளா நன்றாகவே மீடியா வெளிச்சத்தைத் தேற்றிக் கொண்டார்.
கோவை பாஜக., எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீனிவாசனும் ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணித்து பப்ளிசிட்டி மேனியாவில் கரைந்தார். அவரைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி.,யும் பயணித்து ஷர்மிளாவை வாழ்த்தினார். கனிமொழி பயணித்த போது பயிற்சி நடத்துநர் ஒருவர் அவரிடமும் உடன் வந்தவர்களிடமும் டிக்கெட் கேட்டதாகவும் இதனை விரும்பாத ஓட்டுநர் ஷர்மிளா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,தொடர்ந்து பேருந்து நிறுவன அதிபரிடம் இப்பிரச்னையை எழுப்பிவிட்டு பணியிலிருந்து அவர் விலகியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய காரை பரிசாக வழங்கி, “ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. வாடகைக் கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை அவர் மீண்டும் தொடர்வார்” எனக் கூறினார். கமல்ஹாசனின் இந்தச் செயல் சமூகத் தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சமூகத் தளங்களில் பல்வேறு கருத்துகள் இது குறித்து உலாவருகின்றன. அவற்றில் ஒன்று இது…

#ஷர்மிளா #உண்மை #கதை
கோவையில் கலைஞர் மகள் கனிமொழி பயணம் செய்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா பேரூந்தில் கனிமொழியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர்கள் டிக்கெட் எடுக்கவில்லை. பெண் நடத்துநர் அன்னத்தாய் கனிமொழியிடம் டிக்கெட் எடுங்கள் என்று சொன்ன பிறகே 6 பேருக்கு 20ரூ வீதம் 120 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து உள்ளனர்.
நான் கெஸ்டாக (விருந்தினராக)அழைத்து வந்தவரிடம் நீ எப்படி டிக்கெட் கேட்கலாம்? என ஓட்டுநர் ஷர்மிளா நடத்துநர் அன்னத்தாயிடம் தகராறு செய்துள்ளார். கெஸ்டாக அழைத்து வந்தவர்களுக்கும் சேர்த்து 120 ரூபாய் கொடுத்து ஷர்மிளாவே டிக்கெட் வாங்கி இருக்கலாம். அப்படி வாங்கி இருந்தால் நடிகர் கமலிடம் இருந்து இந்த 12 லட்சம் ரூபாய் கார் கிடைத்திருக்காது.
பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த நடிகர் கமல் அதே பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த அன்னத்தாயை பாராட்ட மனம் வரவில்லை. காரணம் அந்த பெண் நடத்துனர் ரீல்ஸ் போட்டு தம்பட்டம் அடித்து பிரபலமாகாதவர் என்பதாலோ?!
தனக்கு வேலை செய்ய விருப்பம் இல்லாமல் அப் பணியில் இருந்து தாமே விலகிக் கொண்ட ஷர்மிளா தன்னை அப் பணியில் இருந்து நீக்கி விட்டனர் என்று நாடகம் ஆடி மக்களிடம் அனுதாபம் தேடிக் கொண்டார். தனக்கு பணி வழங்கி கௌரவித்த முதலாளி மீது வீண் பழி சுமத்தினார்.
ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்துவரும் மணிமாறன் அவர்களின் பொதுநல சேவையைப் பாராட்டி ரஜினிகாந்த் அவர்கள் ஆம்புலன்ஸ் பரிசளித்ததை மீடியாக்கள் இவ்வாறு பெரிதுபடுத்தவில்லை.
சங்ககிரியைச் சேர்ந்த செல்வமணி என்ற ஒரு ஏழை பெண்மணி ஒருவர் 19 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் ரீல்ஸ் வீடியோ போடாததால் அவரை வாழ்த்த யாரும் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த #வசந்த #குமாரி அவர்கள் 22 ஆண்டுகள் அரசு பேருந்தை விபத்து இல்லாமல் ஓட்டி ஓய்வு பெற்றவர். இவரை பாராட்ட வானதி சீனிவாசன், கனிமொழி, கமல் இவர்களுக்கு மனம் வரவில்லை.
சேலத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற இளம்பெண் மேட்டூர் முதல் ஈரோடு வரை தனியார் பேருந்தை இன்றும் ஓட்டி வருகிறார்.
மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைக்கு வந்து பேருந்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து #ஷர்மிளா நான் தான் தமிழ்நாட்டிலே முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்று பொய் சொல்லி நடித்து அலைந்தவளை காரி துப்பாமல் கார் பரிசளித்து இருப்பது தவறான செயல்.