பள்ளிப் பேருந்தில் பள்ளிக்கு பயணப்பட்ட பாம்பு !

அடடே... அப்படியா? தமிழகம்

school bus 1 - 2026பள்ளி நாட்களில் காலையில் குழந்தைகளை பள்ளி அனுப்ப பரபரப்பு,அதனிடையே பள்ளிக்கு அனுப்பி பெருமூச்சு விடுவதற்குள், தனியார் பள்ளி பேருந்துகளில் ஏற்படும் அதிர்ச்சி தரும் செய்திகள் வேறு மனதை கலக்குகிறது.snake 1 - 2026அவற்றில் ஒன்றாக  ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமம் அருகே தனியார் பள்ளிப் பேருந்தில் 8 அடி நீள சாரைப் பாம்பு புகுந்துள்ளது.தனியார் பள்ளி பேருந்தில் பாம்பு புகுந்ததால் மாணவ,மாணவியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பாம்பு வெளியே எடுக்கப்பட்டதால் மாணவர்கள் தப்பித்தனர்.இச்செய்தி அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்திய போதும்,யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற வகையில் ஆறுதலையும் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.